Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஸ்கொட்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியத்தில் போராட்டம்

November 2, 2021
in News, Sri Lanka News
0
கோட்டாவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஸ்கொட்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியத்தில் போராட்டம்

‘கோப்26’ கிளாஸ்கோ மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறும் தமிழர் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி ஸ்கொட்லாந்திலும் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ‘கோப்26’ கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார்.

அவரது வருகைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஸ்கொட்லாந்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் முன்பாக ஆர்ப்பாட்டம்

‘கோப்26’ கிளாஸ்கோ மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்துக்குச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் டன்பிளேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு முன்னாள் நேற்றுக்காலை பெரும் எண்ணிக்கையில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்,  இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் கோட்டாபய ராஜபக்ஷவின் வகிபாகத்திற்காக அவரைக் கைதுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இனப்படுகொலையை நிறுத்து’ என்று கோஷமிட்டவாறு மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அநேகமானோர் பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு வருகைதந்து குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘இந்தப் போர்க்குற்றவாளி எம்மிடமிருந்தோ அல்லது நீதிநிலைநாட்டப்படுவதிலிருந்தோ தப்பித்துக்கொள்ளாமல் இருப்பதை நாம் உறுதிசெய்வோம்’ என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

அதனையடுத்து அங்கு வருகைதந்த பெருமளவான பொலிஸ் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவர் ஒரு போர்க்குற்றவாளி என்றும் குறிப்பிட்டனர். ‘இம்முக்கிய மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவேண்டும் என்றே விரும்புகின்றோம். இருப்பினும் இனப்படுகொலைக்கான நீதியும் காலநிலை மாற்றம் தொடர்பான நீதியும் பிரிக்கப்படமுடியாதவையாகும்’ என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பிரான்ஸில் கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி பிரான்ஸில் உள்ள ஸ்ராஸ்பேர்க் நகரில் புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ‘தமிழர்கள் இனப்படுகொலைகள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படவேண்டும்’, ‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன்னால், தமிழர் இனப்படுகொலைகள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் கோட்டாபய ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவும் கைதுசெய்யப்படுவதுடன் அவர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவேண்டும், தமிழர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை அனைத்து நாடுகளும் வலியுறுத்தவேண்டும், இலங்கையில் தமிழர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாப்பதற்கான தீர்வாக தமிழ் ஈழம் அமையவேண்டும் என்ற மூன்று பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம்

‘கோப்26’ மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தைக் கண்டித்து கடந்த 29 ஆம் திகதி பெல்ஜியத்திலுள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரண்மனை 3 | திரைவிமர்சனம்

Next Post

சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு?

Next Post
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

சமையல் எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures