Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

October 2, 2021
in News, Sri Lanka News
0
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு  லிட்ரோ பாதுகாப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் லிட்ரோ நிறுவனம்  நாளொன்றுக்கு  80 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது.

கடந்த 9 மாதகாலமாக லிட்ரோ நிறுவனம்  சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காததனால் 10500 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் திறைச்சேரியில் இருந்து  நிதி கிடைக்காவிட்டால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலக சந்தையில் எரிவாயு ஒரு மெற்றிக் தொன்னினது  விலை தற்போது  800 அமெரிக்க டொலர்களினால் அதிகரித்துள்ளது.இவ்வாறான நிலையில் 12.5 கிலோகிராம்  நிறையுடைய சமையல்  எரிவாயுவின் கிரயம் 2021 ரூபாவாக காணப்படுகிறது.

எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு தற்போது  1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட  ஏனைய தேவைகளுக்காக 700 ரூபா செலவாகுகிறது. இதற்கமைய 12.5கிலோகிராம் நிறையுடைய சமையல்எரிவாயு சிலிண்டர் 2800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

12.5 கிலோகிராம்  நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவினாலும்,5 கிலோகிராம்நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் லாப் ரக எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு சந்தையில் நிலவுகிறது.

லாப் ரக சமையல்எரிவாயுவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு சுமார் 8 பில்லியன் நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது ஆகவே  12.5 கிலோகிராம்நிறையுடைய சமையல்  எரிவாயு சிலின்டரை 291 ரூபாவினாலும்,5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரை 114 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம்கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சந்தையில் எரிபொருள்விலை அதிகரித்துள்ள காரணத்தினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விற்பனை விலையை அதிகரிக்க நேரிடும். என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவரா? | உங்களை பக்கவாதம் தாக்கக்கூடும்

Next Post

கே.எல். ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி

Next Post
கே.எல். ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி

கே.எல். ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures