கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

கனடா- ஒன்ராறியோவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான புயல் மழையினால் 2,000ற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரத்தடையினால் பாதிக்கப்பட்டனர்.
ஒன்ராறியோவின் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று கனத்த மழை என்பனவற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததனாலும் மற்றய சிதைவுகளினாலும் மின் லைன்கள் சேதமடைந்தன.
பிரின்ஸ் எட்வேட் கவுன்ரி பகுதியில் புளும்வீல்டில் மின்னல் அடித்ததால் திப்பற்றியது. அப்பகுதியில் காற்று மணித்தியாலத்திற்கு 70கிலோமீற்றர்கள் வேகத்தில் வீசியது.
ஹைட்ரோ 1 பணியாளர்கள் மின்சாரத்தை மீள கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமை மாலை நிலைமை சீராக்கப்பட்டுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

rainrain1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *