Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முதல் போட்டியில் வென்ற தென்னாபிரிக்கா முன்னிலையில் !

September 11, 2021
in News, Sports
0
தென்னாபிரிக்காவை தோற்கடித்த இலங்கை தொடரில் முன்னிலை !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில்,164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 19 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி நாளைய தினம் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

கருத்துச் சித்திரம் | ஆர்மி டாக்டர்

Next Post

நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Next Post
கொரோனா தடுப்பூசியால் விவேக் மரணமடைந்ததாக புகார்!

நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

September 5, 2026
நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் ‘துரோகம் பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் ‘துரோகம் பழகு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

September 5, 2026
முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

றினோன் – புளூ ஈக்ள்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன

September 4, 2026
மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது?  அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

மயிலிட்டி காணிகளை விடுவிப்பது எப்போது? அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி

September 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures