20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய மாவட்டத்தை நிர்மாணிக்கவுள்ளதாம் டுபாய்

20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய மாவட்டத்தை நிர்மாணிக்கவுள்ளதாம் டுபாய்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில், 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புதிய மாவட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதானமாக எண்ணெய் வர்த்தகத்தை பொருளாதார மார்க்கமாகக் கொண்டுள்ள டுபாய், எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் தமது நாடு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை காட்டும் வகையிலேயே குறித்த புதிய மாவட்டத்தை அமைக்க டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை டுபாயில் அதிகரித்து வரும் சந்தை கேள்விகளைக் கருத்திற் கொண்டு புதிய பல கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டியதன் தேவைப்பாடு உணரப்பட்டதன் அடிப்படையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே, குறித்த மாவட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஆயினும் இந்த நிர்மாணப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *