Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் முப்படையினருக்கும் என்ன வேலை? விக்கினேஸ்வரன் ஆவேசம்!

August 29, 2016
in News, Politics
0

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் முப்படையினருக்கும் என்ன வேலை? விக்கினேஸ்வரன் ஆவேசம்!

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் இங்கு என்ன வேலை? என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன்.

மறைந்த இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 89 ஆவது பிறந்த நாள் நினைவுப்பேருரையும், நூல் வெளீயீடும் நேற்றுச் சனிக்கிழமை (28) பிற்பகல் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

 

b1

bbb

bbbb

இந்த நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்தும் கருத்து தெரிவிக்கையில்,

எவ்வாறு சுனாமியின் போது பாரிய கடலலைகள் எமது இடங்களையும், மக்களையும், கபளீகரம் செய்தனவோ அதனை ஒத்த விதத்தில் எமது பாரம்பரிய நிலங்கள் பறி போகின்றன.

பல நூற்றாண்டு கால வாழ்க்கை முறைகள் சிதைவடைந்து வருகின்றன. ஒரு பக்கத்தால் சமாதானம் பேச மறு பக்கத்தால் சதி வேலைகள் இடம்பெற்று வருவதை நாம் சுட்டிக் காட்டினால் எமக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டுகிறார்கள்.

கடந்த 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னைய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு ஒரேயொரு பாதுகாப்பாக விளங்கிய 21 ஆவது உறுப்புரிமை இந்த அரசியல் யாப்பில் புறந் தள்ளப்பட்டது.

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கம் முன்பாக ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தன.

அவற்றைப் பரிசீலிக்காமலேயே நிராகரித்தது அரசாங்கம். பல விதங்களில் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு வழி வகுத்தது. 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை எதிர்த்து அதே ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் தந்தை செல்வா தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை எதிர்த்து மீண்டும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அரசாங்கம் யாரை வேண்டுமானாலும் தன்னுடன் போட்டியிட நியமிக்கலாம் எனவும், தேர்தலில் தான்

தோல்வியடைந்தால் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவதாகவும், தான் வென்றால் அரசியல் யாப்பை மாற்றுமாறும் கூறித் தான் அவர் இராஜினாமாச் செய்தார்.

1975 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தேர்தல் நடைபெறவில்லை. பின்னர் இடம்பெற்ற தேர்தலில் தந்தை செல்வா அமோக வெற்றியீட்டினார். அந்த வெற்றிக்கு அமிர்தலிங்கமே வழிகோலினார். அவரது இடையறாத ஊக்கமும், உழைப்பும் தந்தை செல்வாவை வெற்றி பெற வைத்தது.

அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, நாட்டின் நடைமுறை ரீதியாகப் பல விடயங்கள் அக் காலத்தில் மாற்றமடைய ஆரம்பித்தது. கல்வியில் சமன்படுத்தல் இளைஞர்களை விசனம் கொள்ள வைத்தது.

1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு அதிருப்தியை மக்கள் மனதில் விதைத்தது. 1975 ஆம் ஆண்டில் காங்கேசன்துறைத் தொகுதியில் இடைத் தேர்தலை நடாத்தாமை மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

1974 ஆம் ஆண்டில் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொலைகள் மக்கள் மனதில் வடுக்களைத் தோற்றுவித்தது. இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்தே 1976 ஆம் ஆண்டில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் காலத்தில் எமது மக்களின் அகிம்சை முறைக்கு எதிராக அரசாங்கம் வன்முறையையே நாடியது. 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக்கை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத் தீர்மானத்தை அச்சேற்றி, யாழ். பஸ் நிலையத்தில் துண்டுப் பிரசுரமாக விநியோகித்த போது அதனை விநியோகித்த குற்றத்திற்காக அமிர்தலிங்கம் உட்பட நான்கு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 77 பேர் வரை மன்றில் தோன்றி அவசர காலச் சட்டத்தின் சட்ட வரையறை பற்றி ஜீ.ஜீ பொன்னம்பலமும், தமிழர்களின் இறைமை பற்றி என்.திருச்செல்வம் அவர்களும் சிறப்பாக வாதிட்டு இறுதியில் குறித்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

1977 ஏப்ரல் மாதத்தில் தந்தை செல்வா இறைவனடி சேர்ந்தார். அதேவருடம் யூலை மாதம் பொதுத் தேர்தல் இடம்பெற்றுப் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இதன் போது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய காலப் பகுதியில் அவர் தமிழர்களுக்கு மட்டும் தலைவராக இருக்கவில்லை. தேசியப் பிரச்சினைகளில் தனது கவனத்தைச் செலுத்தியது மட்டுமல்லாமல் அப்போதைய அரசினை நேர்வழியில் கொண்டு செல்லக் கூடியதொரு தலைவராகவும் விளங்கினார்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமானது.

அதன் முக்கிய குறிக் கோளாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொழி வாரியாகத் தன்னாட்சி உரிமையுள்ள சமஸ்டி அலகாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. பல தடவைகள் அரசாங்கத்திற்கும், தமிழரசுக் கட்சிக்குமிடையில் உடன்பாடுகள் தயாரிக்கப்பட்டுக் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கிழித்து எறியப்பட்டன.

இதனால், சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சி என்ற கோரிக்கைக்குப் பதிலாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு இருந்த சுதந்திர நாடு மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்

என்ற கோரிக்கை வலுப் பெற்றது. இதுவே, ஆயுதம் ஏந்தியவர்களின் குரலாகவும் ஒலித்தது.

இன்று ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் நாம் மீண்டும் சமஸ்டி அமைப்பின் கீழ் தன்னாட்சிக் கோரிக்கைக்கே தள்ளப்பட்டு விட்டோம்.

இன்றைய கள நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது என்பதை எமது மக்கள் முற்றாக உணர்ந்துள்ளார்களோ என்பதை நானறியேன். போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் இங்கு என்ன வேலை?

முன்னர் தெற்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் மீன்பிடிப்பதற்காக இடம்பெயர்ந்து வந்த மீனவ மக்கள் இன்று நிரந்தர வதிவிடங்களை இராணுவத்தினரின் உதவியுடன் முல்லைத்தீவுக் கடற்கரையில் அமைத்து வருவதன் சூட்சுமம் என்ன? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எமது கனிய வளங்கள் தெற்கிலிருந்து வருபவர்களால் சூறையாடப்பட்டுச் செல்வது எமது மக்களுக்கு இன்னும் புரியவில்லையா?

எமது காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளின் நடுவே மரங்கள் பல வெட்டப்பட்டு காடுகள் அற்ற நிலையில் பல இடுங்கள் மொட்டையாகக் காட்சியளிக்கின்றன.

இதன் மர்மம் என்ன? நாங்கள் தற்போது இராணுவ முகாம்களை மூடிக் கொண்டு வருகிறோம் என அரசாங்கம் கூற அமெரிக்க நிறுவனமொன்று 2009 ஆம் ஆண்டின் பின்னர் 2016 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இராணுவ முகாம்களின் எல்லைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன எனப் படமெடுத்து வெளியிட்டுள்ளதன் தாற்பரியம் என்ன?

பலாலிக் காணிகள் கையளிக்கப்பட மாட்டாது மாறாகக் கையகப்படுத்தப்படும் எனப் பலாலி இராணுவத் தளபதி கூறியதன் அர்த்தம் என்ன?

காணாமற் போனோர், சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக வாடுவோர், விடுவிக்கப்பட்ட போதும் உளப் பாதிப்பிற்கு உள்ளானோர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக நடமாடும் எமது மக்கள், இளம் விதவைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தாய்- தந்தையற்ற அநாதைக் குழந்தைகள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும், போதைப் பொருளுக்கும் அடிமையாகியுள்ள இன்றைய எமது இளைய சமூதாயம் என எமது சமூதாயம் சின்னா பின்னமாக்கப்பட்டுச் சிதைந்து வரும் சூழல் எதனை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது?

நாட்டின் எந்தவிடத்திலும் விகாரைகளைக் கட்டலாம்? சிங்கள மக்களைக் குடியேற்றலாம் என ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்கள் கூறுவது எதனை எடுத்துக் காட்டுகின்றது? எமது இன்றைய இளைய சமூதாயம்

எவ்வாறாயினும் வெளிநாடுகளில் சென்று குடியமர வேண்டும் என்ற வெறியில் வாழ்ந்து வரும் பாங்கு எதனை வெளிப்படுத்துகின்றது ?

எமது பாரம்பரிய நிலங்களில் சுற்றுலா மையங்கள் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருவது எதனை உணர்த்துகின்றது? என் கணிப்பின் படி நாங்கள் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருகின்றோம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்த ஒரு இளம்பெண் சடுதியாக அறிமுகமான ஒரு ஆண் எங்கோ செல்லத் தன்னை அழைக்கிறான் என்றால் அவனை ஏதோ ஒரு சபல புத்தி ஆட்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வான்.

அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுத் தராத அரசாங்கம் தற்போது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும், செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அதற்கான அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆவேசத்துடன் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இரண்டே நாட்களில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கலாம்: தயாராகின்றது விண்வெளி ரயில்

Next Post

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள்

Next Post

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures