போதையில் பள்ளிக்கு வந்து தூங்கிவிடும் ஆசிரியர்! பூட்டு போட்ட மாணவியர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் அருகே கருமாரப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் பணிபுரியும் கருணாநிதி என்ற ஆசிரியர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் வகுப்பில் பாடம் எடுக்காமல் தூங்கி விடுவதாகவும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஆசிரியர் போதையில் மாணவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதையறிந்த மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் உதவியுடன் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்த மங்களூர் பொலிசார் மற்றும் தாசில்தார் முருகன் ஆகியோர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து நடந்ததை விசாரித்து, அந்த ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாக உறுதியளித்த பின்பு மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.