ஸ்ருதிஹாசன் மற்றும் கௌதமிக்கிடையே பிரச்சனையா?
ஸ்ருதிஹாசன் எப்போதும் தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். இவருக்கு பேஷனில் மிகவும் விருப்பம், தன் சிகை அலங்காரத்தை அடிக்கடி மாற்றுவார்.
இந்நிலையில் கௌதமி, ஸ்ருதிஹாசன் பேஷன் சரியில்லை என்று கூறியதாக ஒரு வதந்தி உலா வர, வழக்கம் போல் இருவருக்குமிடையே பிரச்சனை என்று கூறிவிட்டனர்.
ஆனால், இதற்கு அவர்களே முற்றுப்புள்ளி வைத்து விட்டனர், இருவருக்குமிடையே எப்போதும் நல்ல உறவு தான் இருந்து வந்துள்ளது.
கௌதமியே பல மேடைகளில் பேஷனில் சிறந்தவர் யார் என்று கேட்ட போது ஸ்ருதிஹாசன் பெயரையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது