Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயர்தர வெட்டுப்புள்ளியில் பாரிய அநீதி

November 8, 2020
in News, Politics, World
0

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியிருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்  பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவே ஜீவரத்ன தேரரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

உயர்தரப்பரீட்சைக்குத்தோற்றும் அனைத்து மாணவர்களுமே உயர்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர்.

எனினும் அரச பல்கலைக்கழகங்களின் வரையறுக்கப்பட்ட தன்மை காரணமாக நீண்டகாலமாகவே  குறித்தளவான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் சுமார் 181,000 மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்த போதிலும், சுமார் 40,000 மாணவர்கள் மாத்திரமே  பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனவே எஞ்சிய 141,000 மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை 10 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பினும், அது நம்பக்கூடியதாக இல்லை.

ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், அதற்காக ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட வளங்களின் அளவிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் 2020 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டதை விடவும் 40 பில்லியன் ரூபா குறைவாகவே 2021 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எனவே 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுபற்றி கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

Previous Post

5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கடத்தியோர் கைது

Next Post

தமிழ் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம்- மாவை

Next Post

தமிழ் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம்- மாவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures