Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

August 11, 2016
in News, Politics
0
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் கடந்த 7ம் திகதி யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பேரவையின் இணைத்தலைவர்-வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு காத்திரமான உரையை ஆற்றியிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற எல்லையைக் கடந்து ஒரு பொறுப்புள்ள தமிழ் பற்றாளனாக நின்று அவர் தனது உரையை ஆற்றினார் என்று சொல்வதே சாலப்பொருந்தும்

ஈழத் தமிழ் மக்களின் சமகால நிலைமையை அவர் மிகத்தெளிவாக முன்வைத்தார்.

எந்தெந்த இடங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதற்காக ஆட்சியாளர்கள் எப்படியான அரசியல் இராஜதந்திரங்களை பிரயோகிக்கின்றனர் என்ற விடயங்கள் அனைத்தும் விலாவாரியாக விளம்பப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநீதிகளை வெளிப்படையாக வடக்கு மாகாண முதலமைச்சர் கூறி வருவதால் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு அது வெப்பாரமாக இருக்கலாம்.

ஆனால் இன்றைய நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற சதித்திட்டங்களை இனம் காண்பதும் அதனை அம்பலப்படுத்துவதும் கட்டாயமானதாகும். இல்லையேல் தமிழ் மக்களின் எதிர்காலம் மிக மோசமானதாகி விடும்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அரசு அதனைக் காலம் கடத்துகிறது. செயலணிகளை அமைத்து விசாரணை என்ற பெயரில் தமக்குச் சார்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்து தமிழ் மக்கள்பட்ட அவலங்களை இருட்டடிப்புச் செய்ய சதித்திட்டம் நடந்தேறுகிறது.

இதுவிடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உரை ஆளும் கட்சிக்கும் அவர்களோடு நின்று ஒத்தூதுபவர்களுக்கும் மிகப்பெரும் இடஞ்சலைக் கொடுக்கும் என்பது உண்மைதான்.

அதற்காக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறந்து விடுவதென்பது சாத்தியமானதன்று.

சில வேளைகளில் எந்தப் பாதிப்புகளையும் அனுபவிக்காத-அரசுடன் இணைந்து போய் பதவிகளை அனுபவிக்க நினைக்கின்றவர்கள், நடந்தது நடந்தாக இருக்கட்டும், இனி நடப்பதை பார்க்கலாம் என்று கூறலாம்.

ஆனால் இழப்புகளின் வலியை தாங்கி நிற்கும் தமிழினத்தின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமாயின், வடக்கின் முதலமைச்சர் கூறியது போன்று சர்வதேச நீதிபதிகளின் விசாரணையே அவசியமாகும்.

பொதுவில் தமிழ் மக்களின் இழப்புகள் பொய்யானவை போன்றும் கேலிக்குரியதாகவும் கற்பனை போன்றதுமாக ஆக்கப்படுவதே வழமையாகிவிட்டது.

இது அனுபவித்த இழப்புகளின் துயரை மேலும் வலிமைப்படுத்துவதாக உள்ளது.

தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

கொலையாளிகள் ஏதோ ஒரு வகையில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை நடந்தால் முடிவு என்ன என்பதை அவர்கள் சொல்ல முன் நாமே சொல்ல முடியும்.

இதனால்தான் போர்க்குற்றவிசாரணை சர்வதேச நீதிபதிகளால் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தமிழ் மக்களை விழிப்படையச் செய்யும் என்பது திண்ணம். .

Tags: Featured
Previous Post

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையா? அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

Next Post

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

Next Post
மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures