Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரிக்க கோரிக்கை

August 13, 2020
in News, Politics, World
0

கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, (என்.டி.பி) ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை கல்வி வாரத்தை ஒன்றாரியோ மாகாண நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்குமாறு ஒன்றாரியோ முதல்வரை வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கு , ஸ்காபுறோ தென்மேற்கு தொகுதியின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான என்டிபி கட்சியைச் சேர்ந்த Scarborough Southwest, Doly Begum and NDP MPP for Brampton East, Gurratan Singh ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விடயம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதத்தில், சட்டமூலம் 104 என்ற இலக்கமுடைய இந்த மசோதாவானது இலங்கையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் கொடுமைகளை ஒன்றாரியோ பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் நோக்கோடு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற தமிழ் பேசும் உறுப்பினரான விஜய் தணிகாசகலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

எனவே மேற்படி மசோதா 104 ஐ உடனயாக ஒன்றாரியோ மாகாண நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வாக்கெடுப்பிற்கு விடும்படியும். அதற்கு தங்கள் கட்சி, முழுமையான ஆதரவைத் தரும் என்று மேற்படி எம்பிபிக்களான Scarborough Southwest, Doly Begum and NDP MPP for Brampton East, Gurratan Singh ஆகியோர் ஒன்றாரியோ முதல்வருக்கு எழுதியுள்ளனர்.

Previous Post

மீண்டும் மலேசியாவுக்கான தொழில் வாய்ப்பு விசாக்கள் !

Next Post

முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு இல்லை !

Next Post

முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures