கொரோனா உலக தொற்று நோய் நிலைமையின் பின்னர் உலகில் சில நாடுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தின.
எனினும் மலேசியா மாத்திரம் வீட்டு உதவியாளர்களுக்கான விசா அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு பின்னர், மலேசிய அரசாங்கம் தனது நாட்டின் ஏனைய துறைகளில் சேவையாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு தொழில் விசா அனுமதிகளை வழங்கும் என இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

