பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை திருமணத்தில் எதிர்பாராத விதமாக சேர்ட் இல்லாத ஜஸ்ரின் ட்ரூடோ.
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா, ரோவினோ பொது பீச் ஒன்றில் இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் மிகவும் உயர் தர எதிர்பாராத விருந்தினர் ஒருவர்–கனடிய பிரதம மந்திரு ஜஸ்ரின் ட்ரூடோ கலந்து கொண்டார்.
மணப்பெண் நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் பிரதமர் நின்று கொண்டிருந்ததை திருமண புகைப்பிடிப்பாளர் படம் எடுத்துள்ளார். பிரதமர் பீச்சிலிருந்து வெளியேறிய போது தடுமாறி திருமண ஊர்வலத்தில் சேரந்துள்ளார்.பீச்சிலிருந்து வெளியேறியதால் அவர் சேர்ட் அணியாத நிலையில் காணப்பட்டார்.
கணவராக வரப்போபவரை நோக்கி மணப்பெண் நடந்து கொண்டிருக்கையில் பிரதமர் தோன்றியனை தனக்கு சாட்சியாக பிரதமர் நின்றது போல் தான் உணர்ந்ததாக மணப்பெண் தெரிவித்தார்.
கடந்த இரு வாரங்கள் தனது விடுமுறையில் கியு பெக்கில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவரை விஜயம் செய்தார்.இதே காலப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமாக வன்கூவரில் இடம்பெற்ற பிரைட் பரேட்டிலும் கலந்து கொண்டார்.
