Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

July 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பிரதம நிதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்)உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் பாராளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபைக்கு அறிவித்தார்.

ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொரடந்து சபையில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனது வாழ்க்கை பாராளுமன்றம், பாராளுமன்றில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன் என குறிப்பிட்டதை தொடர்ந்து தனது பதவி பிரமாணம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற வேண்டும் என சபாநாயகரிடம் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதற்கமைய 8 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தி பாராளுமன்ற செயலாளர் நாயகம் மூன்று நாட்களுக்குள் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் சிரேஷ்ட அரசியல்வாதியாக கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளதுடன்,இரண்டு தடவைகள் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக 2021 ஜுன் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

பொருளாதார நெருக்கடி,மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த மே மாதம்இ09ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மே மாதம் 12ஆம் திகதி பிரரமராக பதவியேற்றார்.

அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் அளவிற்கு தீவிரமடைந்த காரணத்தினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 37(1) உறுப்புரையின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாக நியமிக்கபட்டார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 15ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அன்றைய தினமே பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமானம் செய்துக்கொண்டார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நேற்று முன்தினம் வேட்பு மனுத்தல் தாக்கல் செய்யபட்டது.பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திஸாநாயக்க,ரணில் விக்கிரமசிங்க மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோர் பாராளுமன்றத்தின் ஊடான ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிட்டனர்.

செல்லுபடியான 223 மொத்த வாக்குகளில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும்,டலஸ் அழகபெரும 82 வாக்குகளையும்,அனுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார். வாக்குகளுக்கமைய நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

Previous Post

ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு !

Next Post

மூன்று மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post
இன்றும் பல இடங்களில் மழை!

மூன்று மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures