இலங்கை அரசியல்வாதிகளில் 75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வத்தளை தொகுதியின் அதிகார சபை கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நேர்மையான நபர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை. இதனால், நேர்மையற்றவர்கள் அரசியலில் நிறைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்











