451 கோடி ஆண்டுக்கு முன்பு சந்திரன் உருவானது: ஆய்வில் புதிய தகவல்
சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் உருவானது என்று அப்பல்லோ விண்கல ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பூமியின் துணைக்கோளான சந்திரன் எப்போது தோன்றியது? என்ற கேள்வி பல ஆண்டுகளாக குழப்பத்தில் இருந்து வந்ததால், இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த ஆய்வின் மூலம் கடந்த 1971-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா மையம் அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பிய போது, அங்கிருந்து ஷிர்கான்ஸ் என்னும் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தனர்.
இந்த கனிமத்தை ஆய்வு செய்த அமெரிக்காவின் கலிபோர்னியா- லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள், சந்திரன் 451 ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.