இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட 863 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 429 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்களைத் தவிர 10 இராணுவத்தினரும், விமானப் படை சிப்பாய் ஒருவரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகிய 34 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.













