Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதி

February 21, 2019
in News, Politics, World
0

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் விமானங்கள் மற்றும் தளபாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் ’ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான கண்காட்சி ஆரம்பமானது. இக்கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 228 டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் ஏ.எல்.ஹெச் துருவ் போன்ற 228 விமானங்கள் ஆப்கானிஸ்தான், மொரீசியஸ், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், 2014 முதல் 2018 வரையிலான 4 ஆண்டுகளில் 424 தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 6 வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் 237 கோடி ரூபாய் முதலீட்டில் இராணுவ தளவாடங்களைத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்

Next Post

இரண்டாம் பாகம் வரட்டும்

Next Post

இரண்டாம் பாகம் வரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures