Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

418 திரைப்பட விமர்சனம்

October 23, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
418 திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர் : இயக்குநர் பிரசாந்த் நீல்

நடிகர்கள் : சைத்ரா ஜே. ஆச்சார், சரண் லக்க ராஜு, சூர்யராஜ், ரமேஷ் இந்திரா, பிரீத்தி பகதாலா மற்றும் பலர்.

இயக்கம் : கீர்த்தன் நடகௌடா

மதிப்பீடு : 2.5/5

கன்னடத்தில் தயாராகி தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் ஹாரர் திரில்லர் ஜேனரிலான திரைப்படம் ‘418’. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதையும், ஹாரர் திரில்லர் ஜேனரிலான படைப்புகளை விருப்பத்துடன் பார்க்கும் பார்வையாளர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதையும் தொடர்ந்து காண்போம்.

மலை வாசஸ்தல பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக அளவில் நன்கொடையை கொடுத்து தங்களுடைய மகனான விவேக் சங்கரை (  சூர்யராஜ்) சேர்த்து விடுகிறார்கள் அவரது பெற்றோர். அவருக்கு அந்த கல்லூரியின் விடுதியில் அமானுஷ்ய விடயங்களால் பதினைந்து ஆண்டுகளாக பூட்டப்பட்டு, பாவிக்காத 418 என்ற அறைக்கு அருகில் உள்ள அறை ஒதுக்கப்படுகிறது.

உளவியல் ரீதியாக பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் தன்னுடைய பெற்றோரின் கனவை நனவாக்குவதற்காக விவேக் சங்கர் அந்த அறையில் தங்கி கல்வி கற்க விரும்புகிறார். ஆனால் அந்த விடுதியின் வளாகத்தில் யாரேனும் பெண்களோ… பெண்மணிகளோ.. அடியெடுத்து வைத்தாலும் அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு அந்த பிரத்யேக அறையில் இருக்கும் அமானுஷ்யமான பெண் தான் காரணம் என கற்பிக்கப்படுகிறது.

இந்த தருணத்தில் அந்த அமானுஷ்யமான பெண் உள்ள அறைக்கு அருகில் விவேக் சங்கரையும், அவருடைய அறை தோழரான ரோஹித் ( சரண் லக்க ராஜு) மற்றும் ரோஹித்தின் காதலியான சயீஷா ( பிரீத்தி பகவாலா) ஆகியோரை அந்த அமானுஷ்ய பெண் கொல்ல முயற்சிக்கிறார். இது தொடர்பாக விவேக் சங்கர் அந்த அறையில் இதற்கும் முன் இருந்தவர்களின் தரவுகளை திரட்டுகிறார்.

அதனை மருத்துவக் கல்லூரியில் மனநல பிரிவில் பேராசிரியராக பணியாற்றும் டொக்டர் பாட்டீலிடம் ( ரமேஷ் இந்திரா) வழங்க, அவர் இந்த அறை தொடர்பான அமானுஷ்யமான பின்னணியை கூடுதலாக விவரிக்கிறார். அதில் தேவிகா என்ற பெற்றோரை இழந்து ஆதரவற்ற யக்ஷகான கலைஞரை அறிமுகப்படுத்துகிறது.

தேவிகா என்ற அந்த யக்ஷ கான கலைஞர் தனது கலையை பார்வையிட வந்த மோகன் எனும் இளைஞரை காதலிக்க தொடங்குகிறார். இந்த காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் வாரிசு ஒன்று உருவாகிவிட்டால் அனைத்தையும் சமாளித்து விடலாம் என தேவிகா திட்டமிடும்போது.. அவரை சூழ்நிலை காரணமாக சுற்றத்தினர் உளவியல் அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள்.

அதிலிருந்து மீள்வதற்கு அவருடைய யக்ஷ கான குரு – ஒரு ஆபத்தான பாதையை வழிகாட்டுகிறார். அதில் தேவிகா வணங்கும் துர் தேவதை, ‘நீ கேட்கும் வரத்தை நான் வழங்குகிறேன். ஆனால் எமக்கு ஆறு பெண்களை உயிர்ப்பலி தருவாயா? ‘என கேட்கிறது. அதற்கு இவளும் சம்மதிக்க… ஆறு பெண்களை தேவிகா கொலை செய்தாரா? இல்லையா? அவள் தாய்மை அடைந்தாளா? இல்லையா? கணவனுடன் தொடர்ந்து இல் வாழ்க்கை நடத்தினாளா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

ஹாரர் திரில்லர் என்றால், ரசிகர்களை ஒலியால் அச்சத்தை உண்டாக்குவது ஒருவகை. கதாபாத்திரத்தின் குணாதிசியங்களையும், அமானுஷ்யங்களையும் வெளிப்படுத்தி அதனூடாக அச்சத்தை ஏற்படுத்துவது மற்றொரு வகை.

இந்த இரண்டையும் கலந்து ரசிகர்களுக்கு முழு நீளத்திற்கு ஹாரர் திரில்லர் அனுபவத்தை வழங்க படக் குழு முயற்சித்திருக்கிறது.

ஆனால் திரைக்கதை தெளிவில்லாமல் பயணிப்பதால் பார்வையாளர்களால் அந்த அனுபவத்தை உணர முடியாமல் குழம்புகிறார்கள்.

சூழல் தரும் நெருக்கடியால் மட்டும் கலையை தீவிரமாக நேசிக்கும் ஒரு கலைஞரால், சுயநலத்திற்காக அந்த நிகழ்த்து கலையில் உள்ள எதிர்மறையான கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள முடியுமா..?

தேவிகா கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் அற்புதமாக நடித்திருக்கிறார். தாய்மைக்காக ஏங்கும் வலியை தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தி இருக்கிறார். சபாஷ்.

விவேக் சங்கர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரியராஜ், அவருடைய அறை தோழன் ரோஹித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண் லக்க ராஜு, ரோஹித்தின் காதலியான சயீஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரீத்தி பகடாலா ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக வழங்கி உள்ளனர். இவர்களுடன் டொக்டர் பாட்டீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ரமேஷ் இந்திராவும் ரசிகர்களை கவர்கிறார்.

2005 – 2020 என  இரு வேறு காலகட்டங்கள்- கொரோனா பெருந் தொற்று பரவிய காலகட்டம்- யக்ஷ கானம்- துர் தேவதை – மருத்துவ கல்லூரி – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் & பேராசிரியர்கள்- அறிவியல் ரீதியான அணுகுமுறை- ‘கடவுள் இருக்கிறார் என்று மக்களை நம்ப வைத்தது தான் சாத்தானின் சாதுரிய தந்திரம்’ எனும் உரையாடல்- என ஏராளமான விடயங்கள் திரைக்கதையில் இடம் பிடித்தாலும்… ரசிகர்களுக்கு ஹாரர் திரில்லருக்கான அனுபவங்கள் என்பது மிக குறைவு தான்.

இருப்பினும் இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை தான் பிரதானம் என்பதால்.. அதில் இசையமைப்பாளர் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் தங்களுடைய பணியை நிறைவாக செய்து ரசிகர்களுக்கு முடிந்த அளவிற்கு உத்வேகத்தை அளிக்கிறார்கள்.  இருப்பினும் அறை எண் ‘418’ என்பது குழப்பத்தையே பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

418 – அச்சமூட்டும் எண் அல்ல.

Previous Post

இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றிக்கு குமார் சங்கக்கார பாராட்டு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

418 திரைப்பட விமர்சனம்

418 திரைப்பட விமர்சனம்

October 23, 2026
இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றிக்கு குமார் சங்கக்கார பாராட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றிக்கு குமார் சங்கக்கார பாராட்டு

October 23, 2026
ஆசிய பரா விளையாட்டுப் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

October 23, 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி

October 23, 2026

Recent News

418 திரைப்பட விமர்சனம்

418 திரைப்பட விமர்சனம்

October 23, 2026
இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றிக்கு குமார் சங்கக்கார பாராட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றிக்கு குமார் சங்கக்கார பாராட்டு

October 23, 2026
ஆசிய பரா விளையாட்டுப் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி சாதனைகளுடன் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

October 23, 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை நாட்டுக்கு அவசியம் – ஜனாதிபதி

October 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures