Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு!

May 5, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் தொடர்பாக 2018 மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களான கஞ்சா போதைப்பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய நீதிமன்றப் பதிவாளரின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் 296 கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் எரியூட்டப்பட்டது.

Previous Post

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

Next Post

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

Next Post

சுகாதார சீர்கேட்டுன் இயங்கி வந்த உணவக உரிமையாளருக்கு அபராதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures