Easy 24 News

340 புராதன கார்களுடன் 5ஏக்கர்கள் சொத்து விற்பனைக்கு!

பிரிட்டிஷ் கொலம்பியா ரப்பென் என்ற இடத்தில் றியல் எஸ்டேட் பட்டியலில் நிலம் ஒன்று விற்பனைக்காக இடப்பட்டுள்ளது. 5-ஏக்கர்கள் கொண்ட இந்த நிலம் பல அசாதாரண அம்சங்களை தன்னடக்கியுள்ளது. பழைய பாணியிலான 340 கார்கள் முக்கிய அம்சங்களாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சஷ்வாப் லேக்கிற்கு அருகாமையில் இந்நிலம் அமைந்துள்ளது.
வன்கூவரில்   சில   மில்லியன் டொலர்களிற்கு கொண்டோ ஒன்றை விற்க முடிந்தால் இந்த 5 ஏக்கர்கள்  வாழ்நாள் சொத்து மதிப்பில் கார்களுடன் வேலை செய்து கொண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம் என விற்பவரான மைக்கேல் ஹால் கூறுகின்றார்.
குறிப்பிட்ட ஐந்து ஏக்கர்கள் மறுசீரமைக்கப்பட்ட வீடு ஒன்று, ஆட்டோ காப்பிற்கான பகுதியாக ஒதுக்கப்பட்ட நிலம், 900-சதுர- அடிகள் கொண்ட மறுசிரமைப்பு கடை ஒன்று, 1200-சதுர-அடி இரும்பு கட்டிடம் ஒன்று மற்றும் நூற்றுக்கணக்கான பழைய பாணி கார்கள்- புதுப்பிக்க தயாரான நிலையில்- போன்றனவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட சில நாட்களில் தினமும் 15-ற்கும் மேற்பட்ட விசாரனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக றியல் எஸ்டேட் முகவர் தெரிவித்தார்.
40-வருடங்காளக கார்களை சேகரித்தாக சொந்த காரர் தெரிவித்தார்.
இந்த சொத்து 1.5மில்லியன் டொலர்களிற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

car6car4car5car3car2carcar1car9

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *