30 நிமிடங்களில் கம்போஸ் செய்யப்பட்ட ‘நெருப்புடா’ பாடல்: சந்தோஷ் நாராயணன்

30 நிமிடங்களில் கம்போஸ் செய்யப்பட்ட ‘நெருப்புடா’ பாடல்: சந்தோஷ் நாராயணன்

‘நெருப்புடா’ பாடல், டிசம்பர் வெள்ளத்தின் மத்தியில், வீட்டில் மின்சாரமில்லாத ஒரு நேரத்தில் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் 30 நிமிடங்களில் ‘நெருப்புடா’ பாடலை முடித்தோம் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் நடிப்பில் ‘கபாலி’ படத்துக்கு இசையமைத்தது குறித்து மனம் திறந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

‘கபாலி’ இந்தி பதிப்பின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டவர், ரேடியோ பண்பலை ஒன்றில் படத்துக்கு இசையமைத்தது குறித்தும், பாடல்களின் வெற்றி குறித்தும் பேசியிருக்கிறார். அவற்றிலிருந்து சில சுவையான தகவல்கள் உங்களுக்காக…

ரஜினிக்கு இசையமைத்தது பற்றி…

என்னால் முதலில் இதை நம்பவே முடியவில்லை. ‘கபாலி’க்காக இசையமைக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, முதலில் சில ட்ராக்குகளை இசைத்துப் பார்த்தேன். அது அவருக்கும் பிடித்திருந்தது. இப்படித்தான் என்னுடைய பயணம் தொடங்கியது.

படத்தின் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து அதை ரஜினி சாரிடம் எடுத்துச்சென்று காட்டினேன். பாடல்கள் அவருக்குப் பிடிக்காவிட்டால் படத்திலிருந்து விலகி விடுவது என்று முடிவு செய்திருந்தேன். மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் பாடல்கள் அவருக்குப் பிடித்திருந்தன. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இசை ஆல்பத்தை எப்படி உருவாக்கினீர்கள்?

படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் எங்களிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், ‘உங்கள் மனதில் இருந்து ரஜினிகாந்த் என்ற பிம்பத்துக்கு இசையமைக்கிறோம் என்பதை தூக்கிவிடுங்கள்’ என்று. அந்த முறையில் பார்த்தால் இசை படத்துக்கு ஏற்றவாறே இருக்கும். ரஜினிகாந்துக்கான இசையாக மட்டுமே இருக்காது.

உங்களுக்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?

சென்னையின் எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்துதான். உலகத்திலேயே மிகச்சிறந்த இசை நம்மிடம் இருக்கிறது. சென்னை எனக்குப் போதுமான அளவு உத்வேகத்தை அளித்திருக்கிறது.

பாடல்கள் எங்கே கம்போஸ் செய்யப்பட்டன?

பாடல்கள் என்னுடைய வீட்டிலும், ஸ்டூடியோவிலும் உருவாக்கப்பட்டன. ‘நெருப்புடா’ பாடல், டிசம்பர் வெள்ளத்தின் மத்தியில், வீட்டில் மின்சாரமில்லாத ஒரு நேரத்தில் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் 30 நிமிடங்களில் ‘நெருப்புடா’ பாடலை முடித்தோம்.

‘ரஜினி படம்’ என்ற எதிர்பார்ப்பாலேயே இசையமைப்பதில் அழுத்தமும் கூடியிருக்குமே?

ரஜினி சாரின் படப் பாடல்கள் சிறப்பாக அமையவில்லை என்றால் ரசிகர்கள் எப்படிக் கற்களைக் கொண்டு தாக்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அதிலிருந்து தப்பிக்க ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.

ஆனால் இசை வெளியீட்டு விழா இல்லை என்று கூறிவிட்டனர். பாடல்கள் வைரலான பிறகு என்னுடைய இசையமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

‘நெருப்புடா’ பாடல் யூடியூபில் ஒரு கோடியைத் தொட்டிருப்பது குறித்து?

அதற்கான முழு பெருமையும் ரஜினிகாந்தையே சேரும்!

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News