இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் 72-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி இன்று நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் 112 சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி கொண்டு புடின் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தினார்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இன்று ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் மற்றும் அங்கு அதிரடி தாக்குதல்களின் மூலம் பலரை கொன்று குவித்து, வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.
இதனால், ரஷ்யாவை முக்கிய எதிரியாக கருதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்யாவை சேர்ந்த விமானப்படை வீரர்களையும், உயரதிகாரிகளையும் பிணையக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ரஷ்யா இரண்டாம் உலகப்போரின் வெற்றியை இன்று கொண்டாடி வந்த நிலையில், தாங்கள் சிறைபிடித்து வைத்திருந்த ரஷ்ய அதிகாரிகளின் ஒருவரின் தலையை ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டித்துள்ளனர்.
அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 12 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா மொழியல் ஐஎஸ் தீவிரவாதிகள் சில எச்சரிக்கை வார்த்தைகளை விட்டிருப்பதாகவும், தலைதுண்டிக்கப்பட்ட அதிகாரி ரஷ்யாவின் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் Colonel Evgeny Petrenko எனவும் மாஸ்கோவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.