2017விக்டோரியா தினத்தன்று திறந்து மற்றும் மூடப்பட்டு இருப்பன எவைகள்?..

இந்த வருடத்தின் முதல் இளவேனிற்கால நீண்ட வார இறுதி விடுமுறையை கனடிய குடும்பங்கள் மகிழ்ச்சியாக கழிக்க உள்ளனர்.
நகரம் பூராகவும் பல இடங்களில் வண்ணமயமான வானவேடிக்கைககளை கண்டு கழிக்கலாம்.
விக்டோரியா தினமான திங்கள்கிழமை எவை எவை திறந்திருக்கும் மூடப்பட்டிருப்பவைகள் எவைகள் என்பதை கீழே காணலாம். அத்துடன் நகரின் எந்த பகுதிகளில் வானவேடிக்கைகளை கண்டு மகிழலாம் எனவும் அறிந்து கொள்ளுங்கள்:
விக்டோரியா தினத்தன்று திறந்திருப்பவை-
ஒன்ராறியோ பிளேஸ்.
றிவர்டேல் பண்ணை.
ஹை பார்க் மிருககாட்சிசாலை.
சிஎன் ரவர்.
ஒன்ராறியோ சைன்ஸ் சென்ரர்.
ஒன்ராறியோ ஆர்ட் கலரி
றோயல் ஒன்ராறியோ மியுசியம்.
ஈரன் சென்ரர், ஸ்குயர் வண், வாஹன் மில்ஸ் மற்றும் ரொறொன்ரோ பிரிமியம் அவுட்லெட்ஸ்.
ரிரிசி மற்றும் கோ போக்குவரத்து சேவைகள் விடுமுறை தின மணித்தியாலங்கள்.
விக்டோரியா தினத்தன்று மூடப்பட்டிருப்பன?

அரசாங்க காரியாலங்கள்.
வங்கிகள்.
ரொறொன்ரோ பொது நூலக கிளைகள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.
சகல எல்சிபிஓ மற்றும் பியர் கடைகள்.
யோர்க்டேல் சொப்பிங்சென்ரர், வெயர்வியு மோல், ஸ்காபுரோ ரவுன் சென்ரர்.
விக்டோரிய தின வானவேடிக்கைகளை எங்கு பார்க்கலாம் ?

ஞாயிற்றுகிழமை இரவு கனடா வொன்டலான்ட்-[காலநிலை இடம்கொடுத்தால்}.
ஸ்ரோவில் மெமொறியல் பார்க்கில் ஞாயிற்றுகிழமை 9.மணி-காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது.
டன்டாஸ் டிரைவிங் பார்க்-ஹமில்ரனில் ஞாயிற்றுகிழமை இரவு 9.30. காலநிலை காரணமாக திங்கள்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஷ்பிரிட்ஜஸ் பே பார்க்கில் திங்கள்கிழமை இரவு 9.45ற்கு ஆரம்பம்.
டாக்டர்.வில்லியம் லாஸ்பி அரேனா கிங் ரவுன்சிப் டஸ்க்கில் திங்கள்கிழமை.

நீண்ட வார இறுதி நாள் குடும்பத்தினர் அனைவருக்கும் கேளிக்கை நிறைந்ததாக அமையும்.
ஹாபவுரொன் மையத்தில் சேர்க்கஸ் மே மாதம் 19-22வரை இடம்பெறும்.
மே19-22வரை ஒன்ராறியோ பிளேசில் Culinary Ontario Festival இடம்பெறும்.
மே20-22 புரொன்டே கிறிக் புறொவின்சல் பார்க்கில் விக்டோரியன் ரீ பார்ட்டி இடம்பெறும்.
றிப் மற்றும் கிராவ்ட் பியர் விழா யங் மற்றும் டன்டாஸ் சதுக்கத்தில் மே18-21வரை இடம்பெறும்.
பிளக் கிரீக் பயனிர் வில்லேஜில் மே20-22வரை Pirates and Princesses இடம்பெறும்.

vic3vic2vic1vic

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *