2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் கோஹ்லி அடித்த முதல் சதம்!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் எடுத்தது. இதில் ரகானே 79 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 103 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தனது 13 வது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னர் ஆடிய 7 இன்னிங்ஸிலும் கோஹ்லி ஒற்றை இலக்க ஓட்டங்களிலே ஆட்டமிழந்தார்.
இதனால் அவரின் சராசரி 18.85 ஆக இருந்தது. இதில் அதிக பட்சமாக 45 ஓட்டங்கள் மட்டுமே இருந்தது. இதனால் பெரிதும் விமர்சனத்திற்கு ஆளான அவர் இந்த போட்டியில் அதிகப்படியான ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்.
இதனால் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, அதன் பின் தன் ஓட்டங்கள் வேட்டையை தொடங்கி நேற்று சதம் அடித்து விமர்சனத்திற்கு எல்லாம் முட்டு கட்டை போட்டார்.
அது மட்டுமில்லாமல் 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் கோஹ்லி அடித்த முதல் சதம் இதுவாகும். இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் (81 இன்னிங்ஸ்) 3429 ஓட்டங்கள் (13சதம், 12 அரை சதம்) அடித்துள்ளார்.