நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் சகலவற்றினதும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (22) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை நிறைவில், கடந்த 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டன.
அரச முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமுறையின் பின்னர், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

