குயின்ஸ் பார்க்கில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் தின கொண்டாட்டம்!
ஒன்றாரியோ மாகாணத்தின் லிபரல் கட்சி அரசும் அதன் முதல்வர் கெத்தலின் வின் அவர்களும் இணைந்து நடத்திய தமிழர் மரபுரிமை நாள் மற்றும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான “குயின்ஸ் பார்க்கில்” சிறப்பாக நேற்று புதன்கிழமை 18ம் திகதி மாலை நடைபெற்றது.
கனடிய தமிழர் சமூகத்தின பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வர்த்தகப் பிரமுகர்களும் அரசியல் ஆர்வலர்களும் அங்கு கலந்து கொண்டனர்.
முக்கியமாக தற்போது இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள வடக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா, சுகாதார அமைச்சர் திரு சத்தியலிங்கம், மற்றும் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு தண்டாயுதபாணி ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.