ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கவில்லை என்றால் முதலமைச்சரை முற்றுகையிடுவோம்- பிரபல இயக்குனர்
ஜல்லிக்கட்டு விவகாரம் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் இப்போது ஜல்லிக்கட்டுக்கு போராடுவதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் நடந்துவரும் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதமன் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்.
பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்த வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என்றார்.
