கனடாவில் போலீஸ்உடையுடன் ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர்.
அந்த மர்ம நபர் போலீஸ் உடையில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி உள்ளார். ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள கனடாவில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கனடா நாட்டில் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் உள்ள போர்ட்டாபிக் என்ற ஊரில், ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அந்த மர்ம நபர் துப்பாக்கியில் சுடுவதற்கு முன்பு ஜீப்பில் கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
இதற்கு பிறகுதான் வீடுகளுக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மொத்தம் 17 பேரை சுட்டு பொசுக்கி விட்டார். இந்த 17 பேரில் பெண் போலீஸ் ஒருவரும் அடக்கம்.
இவர் பெயர் ஹய்தி ஸ்டீவன்சன். வயது 23 என்றும் தெரியவந்துள்ளது.

