கொடிய தீவிரவாதிகளின் தாக்குதலால் அகதிகளாக சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சுமார் 1400 பொதுமக்கள் சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் இவர்களுக்கு பகல் உணவை கொண்டு வருமாறு சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகம் ஒலிபெருக்கியில் அறிவித்ததற்கு இணங்க சாரை சாரையாக பொதுமக்கள் பகல் உணவுகளை வீடுகளில் இருந்து கொண்டு வந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் பிஸ்கட், கேக்,தண்ணீர் போத்தல்,குளிர்பானங்கள், சிறுவர்களுக்கான உணவுகளை சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல், மாளிகைக்காடு சாலிஹீன் ஜூம்மா பள்ளிவாசலிலும் வழங்க முடியும்.

