10வயது சிறுமியை தாக்கியதுடன் நின்று விடாது காட்டிற்குள் இழுத்து சென்ற கறுப்பு கரடி..
கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா.போட் கொக்குயில்ரம் என்ற இடத்தில் 10-வயது பெண் கறுப்பு கரடியால் தாக்கப்பட்டாள்.தாக்கிய கரடி விடாது அவறை மரக்காட்டிற்குள் இழுத்து செல்ல முயன்றது.
அவளின் தந்தையும் மற்றவர்களும் சேர்ந்து கற்கள் தடிகளுடன் கரடியுடன் போராடி வெற்றிகரமாக காப்பாற்றினர். கடுமையான காயங்களுடன் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
கரடி அவளை விடவே இல்லை என சாட்சியஙகள் தெரிவித்தன.பற்றைக்குள் இழுத்து சென்று நீண்ட தூரம் கொண்டு செல்ல முயன்ற சமயம் மக்கள் கரடியின் தலையில் அடித்துள்ளனர். இறுதியில் அவளை போக விட்டது. ஆனால் திரும்பவும் அவளை கடிக்க முயன்றது.
கரடி தனது குட்டியுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் வன அதிகாரிகள் கரடியை கொன்றுவிட்டனர்.
அதிகாரிகள் குட்டியை நிசப்தம் அடைய செய்தனர். ஆனால் மிருகங்கள் குப்பை மணத்தால் ஈர்க்கப்பட்டு சென்றுவிட்டதாகவும் பின்னர் குட்டிக்கு என்ன நடந்ததென தெரியவரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.