1.9மில்லியன் மின் அஞ்சல் விலாசங்கள் மற்றும் 1,700 பெயர்கள் தொலை பேசி இலக்கங்கள் என்பவைகள் பெல் நிறுவனத்தின் தகவல் தளத்திலிருந்து திருடப்பட்டுள்ளது. இது குறித்து அதன் வாடிக்கையாளர்களிடம் பெல் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பெல், கனடாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும்.
இத்திருட்டிற்கு காரணம் ஒரு அனாமதேய ஹக்கர் என தெரிவித்த பெல் ஆர்சிஎம்பியுடன் இணைந்து இது குறித்த புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.
நிதி சம்பந்தப்பட்ட கடவு சொற்கள் அல்லது மற்றய தனிப்பட்ட தகவல்கள் அணுகப்பட்டதற்கான குறிப்புக்கள் எதுவும் இல்லை என நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்தவாரம் 150-ற்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இடம்பெற்ற பாரிய கணனி தாக்குதலினால் கிட்டத்தட்ட 200,000 கணனிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தில் இடம் பெற்ற உடைப்பு எப்போது இடம்பெற்றதென்பது தெளிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.
2014-ல் பெல்லில் 22,421-பாவனையாளர்களின் பெயர்கள் கடவுச்சொற்கள் மற்றும் ஐந்து செல்லு படியாககூடிய கடன் அட்டைகளின் இலக்கங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கியுபெக் இளைஞர் ஒருவர் மீது ஆர்சிஎம்பி குற்றம் சுமத்தியது