1.35 மில்லியன் டொலர்களை எட்டியுள்ள ரொறொன்ரோ தனி வீடுகளின் விலை.

1.35 மில்லியன் டொலர்களை எட்டியுள்ள ரொறொன்ரோ தனி வீடுகளின் விலை.

கனடா-வீடுகளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ரொறொன்ரோ பகுதிகளில் தனி வீடொன்றில் விலை 1.35 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதென ரியல் எஸ்ரேட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அதன் அமைப்பினூடாக 8,547விற்பனைகள் சென்றுள்ளதாக தெரிவித்த சபை நவம்பர் 2015-ஐ விட விற்பனை 16.5சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
சகல வகையான வீடுகளின் சராசரி விற்பனை விலை கடந்த வருடம் இதே நேரம் 776,684 டொலர்களாக இருந்துள்ளது. இந்த வருடம் 22.7சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது.
416 அஞ்சல் குறியீட்டு பகுதிகளில்- ரொறொன்ரோ நகர் உட்பட்ட- 905 அஞ்சல் குறியீடு கொண்ட பகுதிகளை விட பொதுவாக அதிகரித்துள்ளது.
416குறியீட்டு பகுதிகளில் முழுமையான தனி வீடொன்றின் சராசரி விலை 1.35மில்லியன் டொலர்களாகும்.இந்த அதிகரிப்பு கடந்த வருடம் இதே நேரத்தை விட 32.3 சதவிகிதம் அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வீடு 905அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் 25.5சதவிகிதம் அதிகரித்து 957,517டொலர்களாக காணப்படுகின்றது.
நீண்ட காலமாக காணப்படும் சொத்து பட்டியல் பற்றாக்குறை விலை அதிகரிப்பு மற்றும் கொள்வன வாளர்களாக இருப்பவர்களின் விரக்தி என்பன காரணமாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *