Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஸ்ரீரெட்டியிடம் சவால் விடுங்க-லாரன்ஸுக்கு சுரேஷ் காமாட்சி பதிலடி

April 16, 2019
in Cinema
0

நாம் தமிழர் கட்சியின் சீமானின் பெயரை சொல்லாமல், அவர் மீது குற்றம் சுமத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். இதற்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், அவர் இயக்கிய காஞ்சனா 3 வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார் என்று ராகவா லாரன்ஸ் குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், லாரன்ஸுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி கொடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்…

“கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வரும் சீமான் என்றைக்கும் ஓடி ஒளிந்ததில்லை. இந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்… ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை… மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்… அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான நானே இதற்கு பதில் சொல்கிறேன்…

நான் பத்திரிகை, தொலைக்காட்சி, முகநூல், டுவிட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன். எனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்? மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது?

முதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை. எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

ஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப்புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது. வீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

யாரையும் முன்னிருத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம். நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை.

நாங்க என்ன வேலை செய்கிறோம்? நீங்க என்ன வேலை செய்றீங்க? உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்கு? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும்? யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை? யாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்…

அதற்கு வேறு நல்ல காரணத்தை தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை.

இந்த சவால் விடுறது மோதிப்பார்க்கிறதுன்னு வந்துட்டா.. தம்பிக… பிள்ளைகளை காட்டி பணம் பண்ணுகிற இடம்… நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும்.. அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா??

நாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே… படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன? சவால் விடணும்… மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்… அவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க… அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்… அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்?? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்??

எதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள், உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமானுக்கு போனில் அழைத்து சொல்லியிருக்கலாம். அவரை நீங்கள் அழைத்திருந்தால் நேரடியாகக்கூட வந்திருப்பார். தம்பிகளை பண்பாளர்களாகவே வளர்க்கவும் நினைக்கிறார். முனைகிறார். தவிர… சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்…

நீங்கள் எங்கள் இலக்கல்ல.. நாங்கள் மோடி… ராகுல் காந்தி என மோதிக் கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை . ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.”

இவ்வாறு காட்டமாக பதில் சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Previous Post

துப்பறிவாளன் 2 : விஷால் ஆர்வம்

Next Post

10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங்

Next Post

10 கிலோ எடை குறைத்த ரகுல் பிரீத் சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures