ரொறொன்ரோ-விசித்திரமான மனிதன் ஒருவன் ஸ்காபுரோ சுற்றுபுறம் ஒன்றில் குழந்தைகளை அணுகுதல் அல்லது அவர்களை தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்கின்றமை குறித்து பொலிசார் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் இது வரை ஐந்து சம்பவங்கள்நடந்துள்ளன.
இறுதியாக கடந்த புதன்கிழமை நெல்சன் வீதி மற்றும் மக்லிவின் அவெனியு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இறுதி சம்பவத்தில் நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரு பிள்ளைகளை அணுகிய அறிமுகமற்ற ஒரு மனிதன் அவர்களை அவர்களது பாடசாலைக்கு கூட்டிச்செல்வதாக தெரிவித்துள்ளான்.
இச்சம்பவம் மற்றொரு சம்பவம் நடந்த எட்டு நாட்களின் பின்னர் நடந்துள்ளது. அச்சம்பவத்தில் 10 வயது சிறுமி மக்லிவின் அவெனியு மற்றும் மெல்வேர்ன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பாதை ஒன்றில் நடந்து கொண்டிருக்கையில் முகமூடி அணிந்திருந்த மனிதன் ஒருவன் சிறுமியை தாக்கியுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி துணிவுடன் அவனை உதைத்து விட்டு ஓடி தப்பிவிட்டாள்.
எல்லாமாக ஐந்து சம்பவங்கள் நடந்துள்ளன. அனைத்திலும் மனிதன் ஒருவன் அப்பகுதியில் சிறுவர்களை அணுகுதல் அல்லது தாக்கும் நடவடிக்கைள் நடந்துள்ளன. பிப்ரவரி 10-முதல் இது வரை குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றய மூன்று சம்பவங்கள் பரோஸ் ஹால் புளுவார்ட் மற்றும் பெர்விஸ் கிரசென்ட மற்றும் மாமொத் ஹால் டிரெயில் மற்றும் மெல்வேர்ன் வீதி பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன.
அனைத்து சம்பவங்களிலும் மனிதன் ஒருவன் பனிச்சறுக்கு முகமூடி அணிந்தவாறு ஒரு இருண்ட-கிரே அல்லது கறுப்பு செடான் வாகனத்தை இயக்கத்தில் விட்டு விட்டு 10-வயது சிறுமி ஒருத்தியை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளான். பாடசாலையில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்து சிறுமி மீண்டும் பாடசாலை நோக்கி ஓடி சென்று சம்பவத்தை தெரியப்படுத்தியதும் தகவல் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ஆண் சந்தேக நபர் ஒருவர் வாகனத்தை சிறுவர்கள் கூட்டமொன்றை அணுகி நிறுத்தி விட்டு அவர்களிற்கு சவாரி வழங்குவதாக தெரிவித்தான்.
இச்சம்பவங்கள் குறித்து பொலிசார் அப்பகுதி பெற்றோர்களிடம் பாதுகாப்பு குறித்தும் அன்னியர்கள் அவர்களை அணுகினால் என்ன செய்ய வேண்டும் என்பன குறித்தும் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.



