Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘வோரியர்’ கிண்ண ரக்பி செவன்ஸ் இலங்கை விமானப்படை ‘ஏ’ அணி சம்பியன்

November 1, 2021
in News, Sports
0
‘வோரியர்’ கிண்ண ரக்பி செவன்ஸ் இலங்கை விமானப்படை ‘ஏ’ அணி சம்பியன்

இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் ஒன்றிணைந்த ரக்பி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ‘வோரியர்’ கிண்ண ரக்பி செவன்ஸ் தொடரில் விமானப்படை ஏ அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் இலங்கை இராணுவத்தின் ஏ மற்றும் பீ அணிகள், இலங்கை கடற்படையின் ஏ மற்றும் பீ அணிகள் , இலங்கை விமானப்படையின் ஏ மற்றும் பீ அணிகள் , இலங்கை பொலிஸ் ஏ மற்றும் பீ அணிகள் மற்றும் சீ.எச். அண்ட் எப்.சீ. அணியும் ஹெவ்லொக்ஸ் அணி என மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றிருந்தன.

கொழும்பு  ‘பொலிஸ் பார்க்’ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை விமானப் படையின் ஏ அணியும், இலங்கை பொலிஸின் ஏ அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.

இப்போட்டியில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை விமானப்படை ‘ஏ ‘ அணி 24 க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில்  இலங்கை பொலிஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது.

சம்பியன் பட்டம் வென்ற இலங்கை விமானப் படை ஏ அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 250,000 ரூபா பணப்பரிசும் கிடைத்தது. இரண்டாம் இடம் பெற்ற இலங்கை பொலிஸ் ‘ஏ’ அணிக்கு 150,000  ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.  இப்போட்டித் தொடரின் சிறந்த வீரருக்குரிய விருதை இலங்கை விமானப்படை ஏ அணியின் நுவன் பெரேரா வென்றார்.

கொரோனா வரைஸ் பரவல் காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் ரக்பி போட்டித் தொடரொன்று இலங்கையில் நடைபெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள  ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கவுள்ளது.

ஆகையால், ‘இலங்கை ரக்பி குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்யப்படுவதற்காகவே, வோரியர்’ ரக்பி கிண்ணத் தொடரை இலங்கை ரக்பி சம்மேளனம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வீட்டில் கொள்ளையிடச் சென்றவர் பொதுமக்களின் தாக்குதலில் உயிரிழப்பு

Next Post

இந்திய அணிக்கு திறமை உள்ளது ஆனால் மன வலிமை இல்லை | கெளதம் கம்பீர்

Next Post
இந்திய அணிக்கு திறமை உள்ளது ஆனால் மன வலிமை இல்லை | கெளதம் கம்பீர்

இந்திய அணிக்கு திறமை உள்ளது ஆனால் மன வலிமை இல்லை | கெளதம் கம்பீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures