Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலை நிறுத்தத்தை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க GMOA தீர்மானம்

March 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்  

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 4 மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் , நாளை  முதல் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ளது.

இன்றைய  போராட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப் பெறாமையின் காரணமாகவே நாளை  சகல மாகாணங்களிலும் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள பல பிரதான வைத்தியசாலைகளிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தத்திற்கு சமாந்தரமாக துறைமுக சேவையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க உறுப்பினர்களால் சட்டப்படி வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதோடு, வங்கி உத்தியோகத்தர்கள் கருப்பு நிற ஆடையணிந்து பணிக்கு சமூகமளித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை, மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு  இவ்வாரம் முதல் தொடர் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள தீர்மானித்தன.

அதற்கமைய நேற்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார நிலையங்கள் , வைத்தியசாலைகள் உள்ளிட்ட சகல மருத்துவ சேவை நிலையங்களில் வைத்தியர்கள் , சிற்றூழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பல பிரதான வைத்தியசாலைகளில் மருந்து வழங்கல் உள்ளிட்ட எந்தவொரு வெளிநோயாளர் சேவைகளும் இடம்பெறவில்லை. அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமே இயங்கின. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் உரிய தீர்வு வழங்கப்படாமையின் காரணமாக வடக்கு,  வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை நாளை புதன்கிழமை துறைமுகம் , வைத்தியர்கள் , தாதிகள் , நீர் வழங்கல் , மின்சாரம் , ஆசிரியர் சங்கம் , வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பங்களாதேஷ் கோல்வ் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்கள்

Next Post

போர்டர் – காவஸ்கர் தொடரை வென்ற இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஆஸி.யை மீண்டும் சந்திக்கிறது

Next Post
போர்டர் – காவஸ்கர் தொடரை வென்ற இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஆஸி.யை மீண்டும் சந்திக்கிறது

போர்டர் - காவஸ்கர் தொடரை வென்ற இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஆஸி.யை மீண்டும் சந்திக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures