வேட்பாளர்கள் அறிமுகத்தில் விசேட அறிமுகத்தை கட்சித் தலைமையிடமிருந்து பெற்ற லோகன் கணபதி!

வேட்பாளர்கள் அறிமுகத்தில் விசேட அறிமுகத்தை கட்சித் தலைமையிடமிருந்து பெற்ற லோகன் கணபதி!

ஒன்றாரியோ மாகாண கண்சவேட்டிவ் கட்சியின் உள்ளக வேட்பாளர்கள் தெரிவிற்கான 17 தொகுதிகளின் தேர்தல்களில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களின் அறிமுக விழா கட்சியின் உயர் மட்டத் தலைவர்களால் அண்மையில் நடாத்தப்பட்டது,

இந்த நிகழ்வில் பழமைவாதக் கண்சவேட்டிவ் கட்சியின் அவைநாயகம் திரு. பற்றிக் பிறவுன், கட்சியின் இயக்குனர் பொப் ஸ்ராண்லி, கட்சியின் தலைவர் திரு. றிக் டைக்ஸ்ரா, கட்சியின் மூத்த ஆலோசகர் திரு. பாபு நாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடந்த இரண்டு மாத காலமாக நடைபெற்று வந்த உள்ளகத் தேர்தல்களில் பலத்த போட்டிகளிடையே வெற்றியைப் பெற்ற 17 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
குறி;ப்பாக அடுத்த அமைக்கப் போகும் கட்சி இந்தக் கட்சியே என ஊடகங்களாலும், கருத்துக் கணிப்பு நிறுவனங்காளலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்சியில் போட்டியிட முனையும் வேட்பாளர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

2018ல் இடம்பெறப் போகும் இந்த மாகாணசபைத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்களை வெல்லக்கூடிய தொகுதிகளில் நிறுத்துதல் என்ற கனடிய தமிழ்க் கண்சவேட்டிவ் அமைப்பினரின் அபிலாசைக்கிணங்கிய தமிழர்களின் பிரசண்ணம் பல தொகுதிகளிலும் பரவலாக காணப்படுகின்றது.

இதற்கான ஊக்குவிப்பை வழங்குவதற்கான முயற்சியில் பற்றிக்கிற்கான தமிழர்கள் என்ற பெயரில் தோற்றம் பெற்று இப்போது தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பின் செயற்பாட்டின் உயிர்வீச்சாகச் செயற்படும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் அண்மையில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட திரு. லோகன் கணபதி அவர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு கட்சியின் அவை நாயகம் திரு பற்றிக் பிறவுன் அவர்களால் அனைத்து தலைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதிலும் இந்த தேர்தல்களில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக திரு.லோகன் கணபதியை தேர்வு செய்த மார்க்கம் தோன்கில் தொகுதி இடம்பெற்றுள்ளதாகவும், திரு.லோகன் கணபதியின் வருகை மாகாணக் கண்சவேட்டிவ் கட்சியை அந்தப் பிராந்தியத்தில் பலப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
logan new

logan new1

logan new2

logan new3

logan new4

logan new5

logan new6

logan new7

logan new8

logan new9

logan new10

v

303 total views, 303 views today

– See more at: http://www.canadamirror.com/canada/76975.html#sthash.5flltDQR.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *