வீதியில் குழந்தையை பிரசவித்த பின்னர் தாய் மரணம்

வீதியில் குழந்தையை பிரசவித்த பின்னர் தாய் மரணம்

வீதி விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த போதிலும் மருத்துவர்களின் உதவியால் குழந்தை பிரசவமாகியுள்ள சம்பவம் கனடா கியூபெக்கில் இடம்பெற்றுள்ளது.

கியூபெக்கில் Laurier Boulevard சாலையில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதசாரிகள் கடவையூடான வீதியை கடக்க முற்பட்ட போது, அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குறித்த பெண் மீது மோதியுள்ளது.

இதன்போது கார் மோதிய வேகத்தில் அங்கிருந்து சில மீற்றர்கள் தூரம் தூக்கி வீசப்பட்ட குறித்த கர்ப்பிணிப் பெண் பலத்த காயங்களுடன் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் மருத்துவர்களின் உதவியுடன் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த பின்னர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த பெண் குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

மேலும், கார் ஓட்டி வந்த 20 வயது நபருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணை நடத்திவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *