வீடு வாங்குபவர்களின் அடமான காப்பீட்டு பிரிமியம் அதிகரிப்பு!
ஒட்டாவா- கனடா அடமானம் மற்றும் வீடமைப்பு சங்கம் அடமான கடன் காப்பீட்டு தொகையை எதிர்வரும் மார்ச் 17லிருந்து அதிகரிக்கின்றது.
சராசரி வீடு வாங்குபவர் ஒருவருக்கு மாதாந்த அடமான கட்டணம் கிட்டத்தட்ட 5-டொலர்களாக அதிகரிக்கும் என அரச நிறுவனத்தின் மதிப்பீடுகள் கணிக்கின்றன.
ஜனவரி 1 முதல் அமுலிற்கு வந்த புதிய ஒழுங்கு முறை தேவைகளில் இம்மாற்றங்கள் பிரதிபலிக்குமென CMHC தெரிவிக்கின்றது.
காப்பீடு செய்யப்பட்ட அடமானத்தின் கடன் மதிப்பு விகிதத்தை அடிப்படையாக கொண்டு தவணைக்கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றது என கூறப்படுகின்றது.
வீடு வாங்குபவர் 20-சதவிகிதத்திற்கும் குறைந்த தொடக்க பணம் செலுத்தும் போது கடன் கொடுப்பவர்கள் பொதுவாக அடமான கடன் காப்பீட்டை கோருவர்.