வீடுகளிற்கு திரும்பாத கார்களிலிருந்து செய்யப்பட்ட கோஸ்ரர்கள் ரொறொன்ரோ மது கூடங்களில்!

வீடுகளிற்கு திரும்பாத கார்களிலிருந்து செய்யப்பட்ட கோஸ்ரர்கள் ரொறொன்ரோ மது கூடங்களில்!

“இந்த கோஸ்ரர் ஒரு காராக இருந்தது”.

ரொறொன்ரோவில் அமைந்துள்ள The Emmet Ray whiskey  மதுக்கூடத்தில் சென்ட். பற்றிக் தின வார இறுதியில் மது அருந்திவிட்டு வீடுகளிற்கு வாகனங்களை செலுத்தி செல்பவர்களிற்கு ஒரு அறிவுறுத்தல் முயற்சியாக “இந்த கோஸ்ரர் ஒரு காராக இருந்தது” என்ற ஊக்கொலி ஒன்றுடன் கூடிய கோஸ்ரர்கள் வைக்கப்பட்டுள்ளது.
‘உயிரோடு சென்றடைதல்’ அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் ஒன்றின் ஒரு பகுதியே இம்முயற்சியாகும்.
போதையில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரச்சாரமாகும்.
கோஸ்ரர்கள் தயாரிக்கப்பட்ட கனரக உரோகமானது விபத்திற்குள்ளான கார்களிலிருந்து பெறப்பட்டவைகளாகும். இவற்றை வன்கூவரில் உள்ள வாகன உடற்பாக கடை ஒன்று வழங்கியுள்ளதாக ‘உயிரோடு சென்றடைதல்’ திட்ட இயக்குநர் மைக்கேல் ஸ்ருவட் தெரிவித்தார்.
இந்த கோஸ்ரர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக போய் சேர்வதற்கு வித்தியாசமான வழிகளை ஏற்படுத்த மக்களை நினைக்க தூண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஒரு பிரச்சாரம் 2015ல் வேறு விதமாக செயல் படுத்தப்பட்டது. “Tiny Toy Cars,” என வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
உடைந்த பொம்மை கார்கள் அரோஹெட் மில்ஸ் சீரியல் பெட்டிகளில் பொருத்தப்பட்டு சென்ரெனியல் கல்லூரியின் ஆஷ்ரோன்பீ வளாகத்தில் இடம்பெற்ற புதிய மாணவர்கள் நிலைநோக்கு வைபவத்தில் வழங்கப்பட்டது.

hoster1hoster2hoster4hoster5

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *