விரக்தியில் சசிகலா
சிறையில் தனக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படி, சசிகலா அளித்துள்ள மனு மீது சாதகமான முடிவு எடுக்கும்படி அவரது கணவர் நடராஜன் அறிவுறுத்தலில் தமிழக அரசு தரப்பில் இருந்து, கர்நாடக சிறைத் துறைக்கு அழுத்தம் தரப்பட்டது.
மத்திய அரசின் உயர் பொறுப்புகளிலுள்ள, ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரும், கர்நாடக சிறை அதிகாரிகளுடன் பேசியுள்ளனர்.
நாளிதழ், தொலைக்காட்சி, போர்வை,கழிப்பறை உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளை வேண்டுமானால் மேம்படுத்தி தர இயலும் எனக்கூறிய அதிகாரிகள் கட்டில், மெத்தை, வீட்டு உணவு, தொலைபேசி மற்றும் மடிக்கணனி உள்ளிட்ட வசதிகளை அளிக்க சிறை விதிகளில் இடமில்லை என கைவிரித்து விட்டனர்.
இதனால், விரக்தியில் இருக்கும் சசிகலா, மூத்த அமைச்சர்கள் மீதான அதிருப்தியை, தினகரனிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மிரண்டு போன அமைச்சர்கள், சசிகலாவை, தமிழக சிறைக்கு விரைவில் மாற்றுவதற்கான முயற்சி களை மேற்கொள்ளும்படி, தங்களுக்கு மிக நெருக்கமான, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நெருக்கி வருகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனைகளும் போயஸ் கார்டனில் தீவிரமடைந்து உள்ளன.

