விபத்தில் எரிந்து சாம்பலாகிய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று!

ரொறொன்ரோ நகர மையத்தில் ஆடம்பர விலையுயர்ந்த ஸ்போட்ஸ் கார் ஒன்று தீக்கிரையாகிய சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லம்போகினி ஒன்று லேக் ஷோர் புளுவாட் கிழக்குபாதையில் முற்றாக எரிந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை மாலை கிட்டத்தட்ட 7மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.வாகனம் எரிந்து சாம்பலாகுவதற்கு முன்னர் பாதுகாப்பு கம்பியுடன் மோதியிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
எவரும் காயமடையவில்லை. வாகனத்தில் இருந்த அனைவரும் தீ வெடிக்க முன்னர் வெளியேறிவிட்டனர்.
சாரதியின் வயது இனம் இது வரை தெரிய வரவில்லை.
இடிபாடுகளை அகற்ற தட்டையான ரோ-டிரக் தேவை என புலன் ;விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேக் ஷோர் புளுவாட் கிழக்கு பாதை செரி வீதி விசாரனைக்காக மூடப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்திற்காக காலை 10மணியளவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
lam1lam2lam3

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *