விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணி சுவரில் கட்டப்பட்டிருந்த பதாகை இன்று (17) செவ்வாய்க்கிழமை காலை இனந்தெரியாத நபர்களால் கிழித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், தலைவரின் இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்த நிலையில், தொடர்ந்து இந்தப் பதாகை கிழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழர் மத்தியில் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.









