கதையின் நாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து தனக்கென தனியான சந்தை மதிப்பை உருவாக்கி, தொடர்ந்து அதில் வெற்றிகரமாக பயணித்து வரும் நட்சத்திர கலைஞரான விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நூறு சாமி ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ,அண்டனி, சுவாசிகா ,அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவியா அனில் , பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், முனீஸ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ் பகவதி பெருமாள், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பி. தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை மீரா விஜய் அண்டனி வழங்குகிறார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த முன்னோட்டத்தில் இடம்பிடித்து இருக்கும் காட்சிகளும், உரையாடலும் இந்த திரைப்படம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்து கண்ணீரை சுரக்கும் நேர்த்தியான படைப்பு என்ற எண்ணத்தை ஏற்படுத்திருப்பதால்… முதல் நாள் முதல் காட்சியில் படமாளிகையில் பார்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கி இருக்கிறது.













