Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

January 28, 2017
in News
0
விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

விசாவுக்காக திருமணம் செய்து கொண்ட மாணவன்: தக்க பதிலடி கொடுத்த பெண்

விசாவுக்காக தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட நபரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு ஜீவனாம்ச தொகைகையும் நீதிமன்றத்தின் உதவியோடு பெற்றுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Mariam Khaliq என்ற பெண், பிரித்தானியா குடியுரிமையுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

விற்பனை அதிகாரியா பணியாற்ற வந்த இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த Noushad என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Noushad MBA படிப்பிற்காக மாணவர்களுக்காக வழங்கப்படும் விசாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றுள்ளார்.

இவரது விசாக்காலம் 2 ஆண்டுகள் என்பதால் 2013 ஆம் ஆண்டோடு இவரது விசா கலாவதியாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தான் இவருக்கு, மரியாமின் அறிமுகம் கிடைத்துள்ளது.

தனது விசாவை நீட்டித்துக்கொள்ள வேறு வழி இல்லை என்பதால், மரியாதை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார். ஆனால் நவ்சத் தன்னை உண்மையாக காதலிக்கிறார் என்று நம்பிய மரியாம், அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர், நமது திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்கு வருகிறேன்.

அதுவரை நீ காத்திரு என மரியாமிடம் கூறிவிட்டு நவ்சத் கேரளாவிற்கு சென்றுள்ளார். கேரளா சென்ற இவர், நாட்கள் செல்ல மரியாமிடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில், எனது பெற்றோர் நம்முடைய திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் என்னால் இங்கிலாந்து வரமுடியாது என்ற குறுஞ்செய்தியை மரியாமிற்கு அனுப்பியுள்ளார்.

இதில், சந்தேகம் அடைந்த மரியாம், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் உதவியுடன் நவ்சாத் குடும்பத்தை பற்றி அறிய ஆரம்பித்தார். அதன்படி 2015 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சென்ற அவர், நவ்சாத் வீட்டிலேயே சென்று தங்கியுள்ளார்.

மேலும், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை நவ்சாத் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது மரியாமிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், நவ்சாத்தின் பெற்றோர் மரியாதை தங்களது வீட்டில் தங்குவற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்து பிரித்தானியா திரும்பிய மரியாம், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இவருக்கு விவாகரத்து கிடைத்தது. மேலும் மரியாமிற்கு தேவையான தொகையை கொடுத்து விடுகிறோம் என நவ்சாத்தின் குடும்பத்தினர் கூறியதால், தனக்கு வேண்டிய தொகையை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார்.

இதுகுறித்து நவ்சாத் கூறியதாவது, நான் படிப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றேன். அங்கு எனது விசாக்காலம் முடிந்துவிட்டதால், மரியாமின் உதவியோடு அங்கு தங்குவதற்கு முடிவு செய்தேன்.

நான் அவருடன் சாதரணமாகத்தான் பழகினேன். ஆனால் அவர்தான் எங்களது உறவினை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை.

அதனால் தான், கேரளாவிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினேன் என கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?

Next Post

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

Next Post
அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி: என்ன தண்டனை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures