வாழ் நாள் முழுதும் மஹிந்த ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட மைத்திரி!
அனுராதபுரத்தில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவிற்கு மீளவும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. அவ்வாறான நபர் ஒருவருடன் எமக்கு எதிர்கால அரசியல் நோக்கிப் பயணிக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு கருத்துக்கள் நிலவி வருவதாக ஓராண்டு காலமாக பேசப்பட்டு வருகின்றது. எமது கட்சியில் நிலவி வரும் முரண்பாடுகள் காரணமாக எமது பலம் தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிலர் எம்மை உதாசீனம் செய்து ஆட்சி நடத்தவும், எம்மை அடக்கவும் முயற்சிக்கின்றனர். எனவே சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் எப்போதும் எமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
மஹிந்த ராபஜக்சவுடன் தனிப்பட்ட ரீதியில் எமக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாம் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ் நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் 18ஆம் திருத்தச் சட்டத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்ப வழங்கினோம்.
எனினும், பின்னர் கொண்டு வரப்பட்ட 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவும் அவரைச் சுற்றியிருப்போரும் ஆதரவளித்துள்ளனர்.
இவ்வாறான ஒர் பின்னணியில் மஹிந்தவினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீளவும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது.
தனிப்பட்ட நபர்களின் வெற்றியை விடவும் கட்சியின் வெற்றியே தற்போது முக்கியமானதாக காணப்படுகின்றது என துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.