வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பெண் இறந்து போனார்

வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பெண் இறந்து போனார்

நைஜீரியா நாட்டில் ஹருணா என்னும் 19 வயதுப் பெண் கிருஸ்மஸ் தினத்தில் மரணமடைந்துள்ளார். தனது வாழ் நாள் முழுவதும் அவர் ஒரு பிளாஸ்டிக் கூடையில் கழிக்கும் நிலையில் அவர் இருந்துள்ளார். அவர் பிறக்கும் போது நன்றாக தான் இருந்தார் என்றும்.

ஆனால் இடுப்புக்கு கீழ் எதுவுமே வளரவில்லை என்றும் கூறப்படுகிறது. மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இவ்வாறான வித்தியாசமான மரபணு பிர்ச்சனை இருக்கும் என்று மருத்துவர்கள் கூறி கையை விரித்துவிட்டார்கள்.

இப்பெண்ணின் 10 வயது தம்பியே இறுதி தருவாயில் அவரை பராமரித்து வந்துள்ளார். குறித்த பெண்ணை ஒரு பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவரே எல்லா இடங்களுக்கும் இழுத்துச் செல்வது வழக்கம்.

அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் , தனது உடல் முழுவதும் நோ காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மிகவும் மன உறுதியோடு வாழ்ந்த இப்பெண் பரிதாபமாக தனது 19 வயதில் உயிரிழந்துள்ளார்.

வழமை போல மருத்துவர்கள் இந்த இறப்புக்கும் சரியான காரணத்தை சொல்லவில்லை. திடீர் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *