வவுனியாவுக்கும் ஒன்ராரியோவிலுள்ள பிறம்ரனுக்குமான உறவுப்பாலம் உதயமாகிறது!
ஒன்ராரியோவிலுள்ள பிறம்ரன் நகரத்தின் நகரபிரதா லின்டா ஜெஃப்றி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், ஈழத்தின் வவுனியா நகருடன் பிறம்ரன் நகரம் ஏற்படுத்தவுள்ள உறவுப்பாலம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.
“பிறம்ரன் மேஜர் என்ற வகையில், வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை, பிறம்ரன் நகருக்கு உத்தியோகபூர்மாக அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஈழத்திலுள்ள வவுனியா நகருக்கும் பிறம்ரன் நகருக்குமிடையில் ஒரு சகோதர ஒப்பந்தம் ஒன்றைச் கைச்சாத்திடும் நிகழ்வுக்கே இந்த அழைப்பை விடுத்துள்ளேன். இரு நகரங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் 2017 ஜனவரி மாத முன்பகுதியில் இடம்பெறவிருக்கும் இந்த விசேட ஒப்பந்தத்திற்கான திகதியை விரைவில் நிர்ணயிக்கவுள்ளனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் பல மொழிபேசும் பல்கலாச்சார சமூகங்கள் இணைந்து வாழும் பிரதான நகரங்களில் ஒன்றான பிறம்ரன் நகரம், வேகமாக வளர்ந்து வரும் குடிவரவாளர்களான இருபதினாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களும் செறிந்து வாழுகின்ற ஒரு நகரம். இத்தகைய ஒரு ஒப்பந்தம், பிறம்ரம் நகரத்திற்கும், ரொறன்ரோ பெருநகருக்கும் வவுனியா நகருக்கும் பொருளாதார, சமூக, வர்த்தக, கலாச்சார உறவைப் பலப்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையை இங்கே பார்வையிடவும்
http://www.brampton.ca/EN/City-Hall/Mayor-Office/Media/Pages/Media-Release.aspx/77