Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்ப்பு! – அனுப பஸ்குவல்

January 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்ப்பு! – அனுப பஸ்குவல்

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இவ்வருடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே  சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், இருபது இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும என்ற சமூகப் பாதுகாப்பு நிவாரணத்தை வழங்குவதே இந்த ஆண்டு எமது முக்கியப் பணியாகும். ” புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு ” என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள  12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் அதில் 3 இலட்சம் பேரை வலுவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, பயனாளிகளுக்கு பணம் வழங்கும் செயல்முறைக்கு அப்பால், எமது முக்கிய நோக்கம் அவர்களை வலுவூட்டுவதாகும். அதற்காக தற்போதுள்ள பொறிமுறையை மாற்றவும் முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். ஜப்பான் மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000  பேரை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். மேலும்  100,000 பேருக்கு வெளிநாட்டு தொழில்களை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

மேலும், பயனாளிகளுக்கு தொழில்முறை பயிற்சிக்கான ஏற்பாடுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், விவசாயத்தை மேம்படுத்தும் வகையில்  ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடவும் ஊக்குவித்து வருகின்றோம். வெளிநாட்டுச்  சந்தையை இலக்காக கொண்டு, முக்கியமாக தேயிலை, கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட பயிர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவு நிதியம் ஒன்றை ஆரம்பிக்கவும்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மேம்படுத்தப்பட வேண்டும். அதன்படி, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் சுமார் 25,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு அவர்களின்  சேவையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் 2000 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை நலன்புரிப் பணிகளுக்காக மாத்திரம் செயற்படும் நிறுவனமாக இல்லாமல் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நிறுவனமாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும். அதேபோன்று,  இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிக்கு உட்படுத்துவதற்கு சீனாவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன” என்று சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.

Previous Post

போதையின் தாக்கம் – யாழ் பல்கலைக்கழக மாணவன் இயக்கிய விழிப்புணர்வுக் குறும்படம்

Next Post

நாட்டின் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – UNP

Next Post
சஜித்தின் முடிவால் நெருக்கடியில் ரணில்

நாட்டின் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்! - UNP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures